சகோதரர்களிற்குள் சச்சரவு, கண்டித்த தாய் :விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்த சிறுவன்

வடதமிழீழம்: யாழ் பொலிகண்டி தெற்கு வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் கண்டித்ததன் காரணமாக விபரீத முடிவை எடுத்த சிறுவனொருவர் இன்று அதிகாலை பரிதாமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பொலிகண்டி தெற்கு வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த அசோக் ரவி ரஹிம்சன் (வயது 12) என்ற சிறுவனே உ யிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

பூமாலை கட்டும் பொழுது சகோதரிக்கும், இளைய தம்பியான குறித்த விறுவனுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.இதனை அவதானித்த தாய், சகோதரிக்கு இடையூறு விளைவித்த சிறுவனை அடித்துள்ளார்.

இதனையடுத்து சிறுவனை நீண்ட நேரமாக காணாத நிலையில் உறவினர்கள் சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதனையடுத்து உடனடியாக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி அதிகாலை உ யிரி ழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் மேற்கொண்டுள்ளார்.

மேலும், உ டற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் ச டலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: