அவமானம்… ஏமாற்றிவிட்டாள்! கேரளாவை உலுக்கிய சம்பவத்தில் மகளை நினைத்து தந்தை கண்ணீர்

கேரளாவையே உலுக்கிய 6 பேர் கொலை சம்பவத்தில் ஜோலியின் தந்தை அவள் எங்கள் குடும்பத்தை அவமானப்படுத்திவிட்டார் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் 2002 முதல் 2014-ஆம் ஆண்டுக்குள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

ஓய்வு பெற்ற கல்வித் துறை அதிகாரி பி டாம் ஜோஸ் 2008-இல் இறந்தார். அவரது மனைவி மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் அன்னம்மா 2002-இல் இறந்தார்.

அவர்களது மகன் ராய் தாமஸ் 2012 இல், அவர்களது உறவினர் சிலி மற்றும் அவரது 10 மாத மகள் அல்போன்சா 2014 இல் இறந்தார். அன்னம்மாவின் சகோதரர் மேத்யூ மஞ்சடி 2010 -இல் காலமானார்

சொத்து, ஆசை போன்ற காரணங்களுக்காக தனது குடும்ப உறவுகள் 6 பேரை ஜோலி(47) விஷம் வைத்துக் கொலை செய்த சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

இதனால் கைது செய்யப்பட்ட ஜோலி சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது, அவரை காண கூடிய ஏராளமான மக்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.

ஜோலிக்காக வாதாட கோழிக்கோடைச் சேர்ந்த உள்ளூர் வக்கீல்கள் மறுத்துவிட்டதால், ஆளூர் என்ற வழக்கறிஞர் ஜோலிக்காக வாதாடினார்.

இந்த வழக்கை விசாரித்த கோழிக்கோடு நீதிமன்றம், ஜோலியை 6 நாள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டதோடு, வரும் 16-ஆம் திகதி ஆஜர்படுத்த வேண்டும் என தெரிவித்தது.

இந்நிலையில் ஜோலியின் சொந்த ஊரான கட்டப்பனாவில் அவரின் தந்தை ஜோசப் உள்ளார்.

அவரிடம் மகள் குறித்து பிரபல ஆங்கில ஊடகம் எடுத்துள்ள பேட்டி ஒன்றில், அவள் எங்கள் குடும்பத்தினருக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டாள்.

இந்த விஷயத்தை பொறுத்தவரை நாங்கள் எந்த உதவியும் செய்வதாக இல்லை. அவள் அப்பாவியாக இருந்தால் தன் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று அவளே நிரூபித்து வெளியில் வரட்டும்.

இதுதொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம். அவருக்குச் சில பொருளாதாரச் சிக்கல் இருந்தது எங்களுக்குத் தெரியும். பொருளாதார ரீதியாக நிறைய உதவிகளைச் செய்துள்ளோம்.

ஜோலியின் மூத்த மகன் வட இந்தியாவில் படித்து வருகிறான். அவன் படிப்பதற்குத் தேவையான உதவிகளைச் செய்தோம். நாங்கள் அவளை முழுமையாக நம்பினோம். அவள் எங்களை ஏமாற்றிவிட்டாள் என்று வேதனடையுடன் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஜோலி, பொலிசாரின் விசாரணையில், வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தத்தால்,வாங்கியதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: