சிவாஜிலிங்கத்தின் தலைவிதி நாளை தீர்மானிக்கப்படும்!

 

ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் நாளை காலை வவுனியாவில் இடம்பெறும். கட்சிக்குள்ளும், வெளிநாடுகளிலுள்ள ஆதரவாளர்களிடமும் சிவாஜிலிங்கம் தொடர்பாக கடுமையான நிலைப்பாடு உள்ளதால், சிவாஜி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

கட்சியின் முடிவை மீறி ஜனாதிபதி பந்தயத்தில் குதித்தார் எம்.கே.சிவாஜிலிங்கம். இதற்கு கட்சிக்குள் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அவரை கட்சியை விட்டே நீக்க வேண்டுமென கடுமையாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

எனினும், ரெலோவின் யாழ் மாவட்ட அணியின் ஒரு பகுதியினர் சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கின்றனர்.

இதன்படி, இன்று யாழில் நடந்த கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தில் ஒரு பகுதியினர், சிவாஜிலிங்கத்தின் மீது நடவடிக்கையெடுக்கக்கூடாது என வலியுறுத்தினர். இன்னொரு தரப்பினர் அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டில் இருந்தனர். பல்வேறு கருத்து பரிமாற்றங்கள் இங்கு நடந்தன.

இன்றைய கூட்டத்திற்கு எம்.கே.சிவாஜிலிங்கமும் சென்றிருந்தார்.

எனினும், நாளைய தலைமைக்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார் என தெரிகிறது. ரெலோவின் தலைமைக்குழுவில் சிவாஜிலிங்கம் சார்பான நிலைப்பாட்டில் என்.சிறிகாந்தா மாத்திரமே உள்ளார். சிவாஜிலிங்கத்தின் மீது கடுமையான நடவடிக்கையெடுக்க வேண்டுமென கோவிந்தன் கருணாகரம், பிரசன்னா இந்திரகுமார், விந்தன் கனகரட்ணம், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட பெரும்பாலானவரகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

நாளைய கூட்டத்திலும், இதே நிலைப்பாட்டை அவர்கள் வலியுறுத்துவார்கள் என தெரிகிறது.

இதன்படி, முதற்கட்டமாக கட்சிக்கு விளக்கமளிக்கும்படி சிவாஜிலிங்கம் கோரப்படலாம்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: