தமிழீழ விடுதலை புலிகள் மீளுருவாக்க முயற்சி என மலேசியாவில் மேலும் 3 பேர் கைது.!

மலேசியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக மலேசியாவின் மாகாண எம்.எல்.ஏக்கள் சாமிநாதன், குணசேகரன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பினாங்கு துணை முதல்வர் ராமசாமி உள்ளிட்ட மேலும் சிலர் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டது.

இக்கைது நடவடிக்கைக்கு தாம் அஞ்சப் போவது இல்லை என ராமசாமி கூறியிருந்தார். அதேநேரத்தில் சட்டப்படியாகவே நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என மலேசிய அரசு தெரிவித்தும் வருகிறது.

இந்நிலையில் பினாங்கு, சிலாங்கூரில் மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 3 பேரும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தார்கள் என்கிற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து விடுதலைப் புலிகள் விவகாரத்தில் மலேசியாவில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே ம.இ.காவின் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் மீது அனுதாபம் காட்டுவது எந்த வகையில் தவறாகும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தமக்கு தொடர்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் பரவும் செய்திகளை அமைச்சர் குலசேகரன் மறுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குலசேகரன், நான் பல பிரமுகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்கிறேன். அதை வைத்து குற்றம்சாட்ட முடியுமா? எனக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் எந்தவித தொடர்புமே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: