ராஜீவ்காந்தியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம்… வைரலாகும் சீமானின் சர்ச்சை வீடியோ

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை சம்பவத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாள சீமான் பேசிய வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது அவர் பேசியுள்ள வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், ”ராஜீவ்காந்தியை கொன்றது சரி தான், ஒரு காலம் வரும். வரலாறு திருப்பி எழுதப்படும், என் இனத்தை இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற அநியாயப்படையை அனுப்பி, என் இன மக்களை கொன்று குவித்த ராஜீவ்காந்தி என்ற என் இனத்தின் எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என பேசியுள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: