பூமிக்கடியில் பல கிலோ தங்கத்தை புதைத்து வைத்த முருகன்.. தெரியாமல் இருக்க அங்கு மலம் கழித்ததாக பகீர் வாக்குமூலம்

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் முளையாக செயல்பட்ட முருகனிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கடந்த இரண்டாம் திகதி நள்ளிரவில் ரூ 13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

திருவாரூரைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகனும், அவரது அக்காள் மகனான சுரேஷூம் தான் இந்தக் கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் என்பது, திருவாரூர் மாவட்டம் விளமல் அருகே வாகனச் சோதனையில் சிக்கிய மணிகண்டன் மூலம் அம்பலமானது.

இந்த வழக்கில் சுரேஷ் சில தினங்களுக்கு முன்னர் சரணடைந்த நிலையில் நேற்று முன் தினம் பெங்களூர் நீதிமன்றத்தில் முருகன் சரணடைந்தான்.

இந்நிலையில் திருவெறும்பூரில் பூமிக்கடியில் நகைகளை முருகன் புதைத்து வைத்ததாக வாக்குமூலம் அளித்தான்.

இதையடுத்து கர்நாடக பொலிசார் அங்கு சென்று சுமார் 12 கிலோ நகைகளை தோண்டி எடுத்தனர்.

அப்போது நகைகள் புதைக்கப்பட்ட இடம் தெரியாமல் இருக்க அங்கு மலம் கழித்து வைத்திருந்ததாக முருகன் கூறியுள்ளது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனிடையில் இந்த விடயத்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

அதாவது, கர்நாடக பொலிசார் உள்ளூர் பொலிசார் அனுமதி மற்றும் பூமிக்கு அடியில் புதைத்த பொருளை எடுக்க உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் எடுப்பது உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் முருகனை திருச்சி அழைத்து வந்த கர்நாடக பொலிசார் நகைகளைத் தோண்டி எடுத்த விவகாரம் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட நகைகள் பெங்களுரூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் பெங்களூரு பொலிசார் பிடியில் இருந்த முருகனை தமிழக பொலிசார் தற்போது தீவிரமாக விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: