கிளிநொச்சியில் சற்று முன்னர் பொலிஸார் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

கிளிநொச்சியில் சற்று முன்னர் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூ ட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் போக்குவரத்து பொலிசாரின் க ட்டளையை மீறி சென்ற கார் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சூட்டுச் சம்பவத்திற்கு இலக்கானவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னாரை சேர்ந்த 38 வயதான நபரே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: