மலேசிய பொலிசாரின் தீவிர கண்காணிப்பில் சீமான்

தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவு குறித்து பேசி வருவதால் மலேசிய பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் சீமான் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான தொடர்புகள் குறித்த ஆதாரங்களைப் பெற முடியுமானால், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலேசியாவிற்குள் நுழைய தடை விதிக்க முடியும் என மலேசியாவின் துணை கமிஷனர் டத்துக் அயோப் கூறியுள்ளார்.

அரசியல்வாதிகளைச் சந்திக்க சீமான் பல முறை மலேசியாவிற்குள் நுழைந்து வருவதை காவல்துறையினர் அறிந்திருப்பதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு (இ 8) தலைவர் புக்கிட் அமன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பிற்கு நிதி சேர்ப்பதில் அல்லது பயங்கரவாதக் குழுவை ஊக்குவிப்பதில் அவரது பங்கு எவ்வளவு ஆழமானது என்பதை நாங்கள் ஆராய்ந்து பார்ப்போம்.

“அடிப்படை இருந்தால், அவரை நாட்டிற்குள் நுழைய தடை விதிக்குமாறு குடிவரவுத் துறையை நாங்கள் கேட்டுக்கொள்வோம்” என்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் புக்கிட் அமன் தெரிவித்தார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: