திருமணமான சில மணி நேரத்தில் மகளை கொன்று சாம்பலை நீரில் தூவிய பெற்றோர்.. வெளியான புகைப்படம்

இந்தியாவில் திருமணம் ஆன அதே நாளில் 17 வயது மகளை கொலை செய்து அவர் உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்த பெற்றோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் ரெட்லபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தனி (17). இவர் தாழ்ந்த சாதியை சேர்ந்த நந்தகுமார் (19) என்ற இளைஞரை தீவிரமாக காதலித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 12ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறிய சாந்தனி நந்தகுமாரை திருமணம் செய்து கொண்டார்.

இதையறிந்த அவரின் தந்தை வெங்கடேஷ், தாய் அமராவதி மற்றும் உறவினர்களான வரமூர்த்தி, முனிராஜூ ஆகியோர் கொதித்து போனார்கள்.

இதையடுத்து சாந்தனியை கண்டுபிடித்து அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து தங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக ஊர் மக்களிடம் கூறினார்கள்.

மேலும் அவசர அவசரமாக மகள் சடலத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி எரித்து சாம்பலை அங்கிருந்த நீரில் கரைத்தனர்.

ஆனால் இந்த மரணத்தை சந்தேகம் உள்ளதாக கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் சாந்தனியை அவர் பெற்றோர் உள்ளிட்ட நால்வர் கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகம் ஆடியது தெரியவந்தது.

இதையடுத்து வெங்கடேஷ், அமராவதி, வரமூர்த்தி, முனிராஜூ ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: