சுஜித் பலியை தொடர்ந்து 10நாட்களில் நான்காவது குழந்தை! மீண்டும் கவனக்குறைவால் ஏற்படும் சோகம்

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தை ஒன்று இன்று பலியான சூழலில், தமிழகத்தில் தொடரும் குழந்தைகள் உயிரிழப்பு, அவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளர். அவர்களின் 2வயது தமிழரசு தாத்தாவுடன் கயிறுதிரிக்கும் தொழிற்சாலைக்கு சென்றுள்ளான்.

தாத்தா கயிறு திரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த நிலையில் குழந்தை தண்ணீர் தொட்டியின் அருகில் விளைாயடி கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

சில மணி நேரம் கழித்து பேரனை காணவில்லை என்று தேடிய தாத்தா பல்வேறு இடங்களில் சென்று பார்த்துள்ளார். பின் குழந்தை தமிழரசு விளையாடி கொண்டிருந்த தண்ணீர் தொட்டியின் அருகில் சென்று பார்த்தபோது, தண்ணீரினுள் தமிழரசு பேச்சுமூச்சின்றி கிடந்துள்ளான்.

அப்பகுதியில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுபோது தமிழரசு ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவம் போன்று தமிழகத்தில் குழந்தை பலியாவது கடந்த 10நாட்களில் 4வது முறை.

  1. கடந்த அக்டோபர் 29ஆம் திகதி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜிதின் மரண செய்தி வெளியிடப்பட்டது.
  2. அதனை தொடர்ந்து அன்றை தினம் தூத்துக்குடியில், சுஜித் குறித்த செய்தி பார்த்து கொண்டிருந்த பெற்றோர் தன் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்தது தெரியாமல் அக்குழந்தை பலியானது.
  3. அதேபோல், நவம்பர் 4ஆம் திகதி சென்னையில், 4வயது குழந்தை பட்டம்விடும் மாஞ்சா கயிறினால் அறுபட்டு சம்ப இடத்தில் பலியானது.

இச்சம்பவங்கள் அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: