என் முதல் கணவரின் மாமாவுக்கு மதுவில் கலந்து கொடுத்தேன்… அதிரவைத்த வாக்குமூலம்

கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்து ஆறு பேரை கொலை செய்த ஜோலி பொலிசில் தெரிவித்துள்ள புதிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கோட்டை சேர்ந்த ஜோலி ஜோசப் என்ற பெண் கடந்த 2002ல் இருந்து 2014 வரை தனது குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொலை செய்தார்.

இதில் ஜோலி நான்காவதாக தனது முதல் கணவர் ராய் தாமஸின் மாமா மேத்யூவை கொலை செய்தார்.

சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர் அனைவரையும் கொலை செய்ததாக கூறப்பட்ட நிலையில் தாமஸை கொல்ல வேறு காரணம் இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிசார் விசாரணையின் போது அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஜோலி முதலில் தனது மாமியார், மாமனார் பின்னர் முதல் கணவர் ராயை சயனைட் விஷம் வைத்து கொலை செய்தார்.

இதில் ராய் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர் மாமா மேத்யூவின் சந்தேக பார்வை ஜோலி மீது திரும்பியது.

இதனால் அவர் மூலம் சிக்கிவிடுவோமோ என பயந்த ஜோலி அவரை நான்காவதாக கொல்ல முடிவெடுத்தார்.

இதையடுத்து மேத்யூவிடம் நெருங்கி பழக ஆரம்பித்த ஜோலி அவருக்கு மதுவில் சயனைடை கலந்து குடிக்க வைத்து கொலை செய்துள்ளார்.

கணவரை கொலை செய்த போது உபயோகப்படுத்திய சயனைட்டின் மீதியை பயன்படுத்தி மேத்யூவை கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: