மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற கணவன்

மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் அவருடைய கணவர் பொலிஸ் நிலையம் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த நரேஷ் என்பவர் டிவி பழுதுபார்க்கும் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு சாந்தி என்பவரை திருமணம் செய்துள்ளார். தம்பதியருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

நரேஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால், அவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நரேஷ் தனது வீட்டில் குடித்துக்கொண்டிருந்தபோது அவரது மனைவி தடுக்க முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் கோபமடைந்த நரேஷ் திடீரென கத்தியை எடுத்து சாந்தியின் தலையை வெட்டினார். துண்டிக்கப்பட்ட தலையை நள்ளிரவில் ஒரு குப்பியில் அடைத்துவிட்டு, மனைவியில் உடல் கிடந்த அறையை இழுத்து பூட்டியுள்ளார்.

குழந்தைகள் காலையில் எழுந்ததும் தாயை காணவில்லை என தேட ஆரம்பித்துள்ளனர். மூத்த மகள் மட்டும் அறையை எட்டிப்பார்த்த போது, உள்ளே சாந்தி தலையில்லாமல் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர். ஆனால் அதற்குள்ளாக நரேஷ், மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தை அடைந்தார்.

இந்த நிலையில் அவரை கைது செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்பகட்ட விசாரணையில், சம்பவம் நடைபெற்ற போது மது அருந்தவில்லை என்றும், திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்ததாலே கொலை செய்ததாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: