யாருக்கு இம்முறை வாக்கு அளித்தீர்கள்,வீடுகளை தாக்கி, பெண்களுடன் அநாகரிகமாக நடக்க முயன்ற கும்பல்!

கேகாலை, எட்டியந்தோட்டை தமிழ் பிரதேசத்தில் வீடுகளிற்குள் நுழைந்து வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
எட்டியந்தோட்டை கணேபல்ல தோட்டதிற்குள் நேற்று (18) இரவு நுழைந்த கும்பல், அங்குள்ள தமிழ் மக்களின் சில வீடுகளை சேதப்படுத்தியுள்ளனர்.
அங்குள்ள சில பெண் பிள்ளைகளிடம் அநாகரிகமாக அந்த கும்பல் நடக்க முயற்சி செய்ததாக கனேபல்ல பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
யாருக்கு இம்முறை வாக்கு அளித்தீர்கள் என்று கேட்டு மிகவும் அநாகரிகமாக குறித்த கும்பல் செயற்பட்டதாக தெரிவிக்கின்றன.
இந்த செயலில் ஈடுபட்டவர்கள் குறித்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்த கனேபல்ல மக்கள், எட்டியந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிசார் அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்
- Previous கோட்டாவின் பதவியேற்பிற்கு சென்ற ஹிஸ்புல்லாஹ் திருப்பி அனுப்பப்பட்டாராம்!
- Next பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக ஆஜராகிவந்த வழக்கறிஞர் குருபரனுக்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
You may also like...
Sorry - Comments are closed