யாழ்ப்பாணத்தான் தலையில் மிளகாய் அரைக்கும் கயவர்கள்

அவதானம் உறவுகளே!!!!

தற்போது யாழ்ப்பாணத்தில் கீழ் உள்ள படத்தில், உள்ள பொருளானது வீடு வீடாக சென்று விற்கப்பட்டுவருவதாக அறியமுடிகிறது. அதாவது இதை வேண்டி வீட்டு plug இல் சொருகி விட்டால், 15% தொடக்கம் 35% வரை மின்சாரத்தை சேமிக்க முடியும் என்றும் மின்சார பட்டியல் தொகை குறைந்துவிடும் என்றும் கூறப்படுகிறதாம். இது முற்றிலும் தவறான கருத்து, இதனால் மின்சாரம் 15%-35% வரை சேமிக்க பட கூடிய வாய்ப்புக்கள் எதுவுமே இல்லை

அத்துடன் இதன் எண்ணிக்கையை அதிகரிக்க, அதிகரிக்க சேமிப்பு அதிகமாகுமாம். ஒன்றின் விலை Rs.2,000/= ஆக விற்பனை செய்யப்படுவதாக
அறிய முடிகிறது.

அத்துடன் இதில் உற்பத்தியாளர் விபரமோ, தொடர்பு கொள்ள கூடிய தொலைபேசி இலக்கமோ இல்லை என்பதுவும் கவனத்தில் கொள்ளபட வேண்டியது.

இதை வேண்டி யாரும் ஏமாற்றமடைய வேண்டாம்

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: