சுவிஸ் தூதரக ஊழியரிடம் விசாரணை.?

அண்மையில் கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியரான காலியா பரிஸ்டர் பிரான்சிஸ் நேற்று (09) மாலை 4 மணிக்கு மீண்டும் சிஐடியில் ஆஜராகிய நிலையில் 10 மணி வரை 6 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இன்று (10) மீளவும் அவர் சிஐடியில் ஆஜராகவுள்ளார்.
முன்னதாக இன்று மதியம் சிஐடியில் ஆஜராகிய நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு பெண் சட்டவைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த சுவிஸ் தூதரக ஊழியர்   (08) மாலை தனது தூதரக அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் சகிதம் சிஐடியில் ஆஜராகியிருந்தார்.
இந்நிலையில் குறித்த பெண் ஊழியரிடம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று மற்றும் இன்று காலை வரையில் 9 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டது என்று சிஐடியினர் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினர்.
இதேவேளை, அவருக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை இன்று (09) நீதிமன்றம் 12ம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: