19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி ஜனாதிபதி எந்த அமைச்சு பதவியை வகிக்க முடியுமா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் 31 அரச நிறுவனங்களை இணைத்துக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி இன்று வெளியிட்ட அமைச்சுக்களுக்கான அரச நிறுவனங்களை ஒதுக்கியுள்ள வர்த்தமானி அறிவித்தல் மூலம் இது தெரியவந்துள்ளது.

முப்படைகள், அரச புலனாய்வு சேவை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், தேசிய இடர் நிவாரண சேவை மத்திய நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய அபாயகரமான மருந்துகள் கட்டுப்பாட்டுச் சபை இவற்றில் அடங்கும்.

அத்துடன் கடந்த அரசாங்கத்தின் கீழ் தனியான அமைச்சாக இயங்கிய சட்டம் மற்றும் ஒழுங்கு , இம்முறை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேவேளை அதிகமான அரச நிறுவனங்கள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கீழ் உள்ள நிதி, பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த அமைச்சின் கீழ் 48 நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

திறைசேரி, மத்திய வங்கி, காப்பீட்டு பத்திரம் மற்றும் அந்நிய செலாவணி ஆணைக்குழு, அரச வங்கிகள், அந்த வங்கிகள் நிர்வகிக்கும் நிறுவனங்கள், சேவையில் ஈடுபட்டுள்ளோரின் பெறுப்பு நிதியம், அபிவிருத்தி லொத்தர் சபை, தேசிய லொத்தர் சபை என்பனவும் இந்த அமைச்சின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எது எப்படி இருந்த போதிலும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி ஜனாதிபதி எந்த அமைச்சு பதவியை வகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: