கிராமத்திற்குள் வந்த முதலை

மட்டக்களப்பில் உள்ள கிராமம் ஒன்றுக்குள் உள் நுழைந்த முதலையினை அப்பகுதிமக்கள் மீட்டு பிரதேச வனஜீவராசிகளிடம் இன்று கையளித்துள்ளனர்.

மட்டக்களப்பு – வாழைச்சேனை, கருங்காலிச்சோலை பாசிக்குடா சுனாமி மீள்குடியேற்ற கிராமத்திலுள்ள ஆஞ்சனேயர் தீர்த்தகேணிக்குள் குறித்த முதலை நுழைந்த போதே குறித்த முதலை பிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது அம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக காட்டுப் பகுதிகளை அண்டிய நீரோடைகள் மற்றும் குளங்களில் வாழ்ந்து வந்த முதலைகள் ஊருக்குள் புகுந்துள்ளன.

இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் அதனை இரவு பகலாக அவதானித்து சுருக்கு வலை வைத்து பிடித்துள்ளனர்.

அடிக்கடி முதலைகள் குறித்த கிராமத்திற்குள் ஊடுருவும் சம்பவம் இடம்பெற்று வருவதனால், இதனை தடுக்க நிரந்தர தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

பொதுமக்களால் சுருக்கு வலை மூலம் பிடிக்கப்பட்ட முதலையினை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: