ஐக்கிய தேசியக் கட்சியில் (யு.என்.பி)பிளவு தொடர்கிறது.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களால் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கூற்றுக்களை துணைத் தலைவர் சஜித் பிரேமதாச தரப்புமறுத்து வருவதால் ஐக்கிய தேசியக் கட்சியில் (யு.என்.பி)பிளவு தொடர்கிறது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி. போட்டியிடவுள்ளதாக பொதுச் செயலாளர் அகிலா விராஜ் கரியவாசம் முன்பு கூறியிருந்தார்.

எனினும், ரஞ்சித் மத்துமா பண்டாரா எம்.பி. நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று வலியுறுத்தினார்.

சஜித் பிரேமதாசவை கட்சித் தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் மாற்ற வேண்டும் என்பதே பொதுவான ஒருமித்த கருத்து என்று அவர் கூறினார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: