முத்துப்போன்ற பற்களை அழகாக வைத்திருக்க டிப்ஸ்

பொதுவாக ஈறு வீக்கத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஈறு அழற்சி(gingivitis), ஊட்டச் சத்து குறைபாடு, தொற்று நோய் மற்றும் கர்ப்ப காலத்திலும் ஏற்படும்.

இது அல்லாமல் புகைபிடித்தல், தவறான முறையில் பல் கட்டுதல், தவறான முறையில் பல் விளக்குதல் என பல காரணங்கள் உள்ளன நல்ல அனுபவம் வாய்ந்த பல் மருத்துவரிடம், பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஆனால் ஆரம்ப கட்டத்திலேயே இதனை சரியாக கவனிக்க தவறி விட்டால், நாளடைவில் இது பெரிய பிரச்னையாக உருவெடுக்கும்.

அதற்கு அடிக்கடி மருந்துகள் வாங்கி போடுவதை தவிர்த்து விட்டு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும்.

அந்தவகையில் தற்போது ஈறு பிரச்னையை சரி செய்ய கூடிய எளிய சில எளிய வழிமுறைகள் பற்றி இங்கு பார்ப்போம்.

Google
  • ½ டீஸ்பூன் உப்பை தண்ணீரில் கலந்து, காலையிலும் மாலையிலும் உங்கள் வாயை கழுவவும். உப்பில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு குணங்கள், ஈறு வீக்கத்தை குறைக்கும்.
  • தினமும் ஆயில் புல்லிங் செய்வது பற்களுக்கு மட்டுமல்லாமல் ஈறுகளுக்கும் பலத்தை கொடுக்கும்.
  • நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும். பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும். இதனை சீரான முறையில் பின்பற்றி வந்தால் பல் தொடர்பான பிரச்னை இருக்காது.
  • மஞ்சளை வைட்டமின் ஈ எண்ணெயுடன் கலந்து கொள்ளுங்கள். இதனை உங்கள் ஈறுகளின் மீது தடவவும். 15 நிமிடங்கள் கழித்து வாயை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளவும்.
  • பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீருடன் கலந்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். அதனை உங்கள் ஈறுகளின் மீது தடவி, 2 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது பயன்படுத்துங்கள்.
  • எலுமிச்சை சாற்றை தண்ணீருடன் கலந்து, பல் துலக்கிய பின், அதைக் கொண்டு வாயை கழுவுங்கள். ஈறுகளில் இரத்த கசிவு மற்றும் வலி ஆகிய பிரச்னைகள் முன்பை காட்டிலும் குறையத் தொடங்கி விடும்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: