இலங்கையில் இருந்து இந்தியாவில் புகலிடம் கோரி சென்றவர்களுக்கு குடியுரிமை இல்லையா?

இலங்கையில் இருந்து இந்தியாவில் புகலிடம் கோரி வசித்து வரும் அகதிகளுக்கு அந்த நாட்டு பிராஜா உரிமை வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் எந்த ஆலோசனையும் பெறப்படவில்லை என சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

அதேவேளை அகதிகள் மீண்டும் எமது நாட்டுக்கு வருவது அரசியல் ரீதியாக நன்மை தரும் எனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு சென்று புகலிடம் கோரியவர்களுக்கு குடியிரிமை இல்லை என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஏனைய நாட்டு மக்களுக்கு குடியிரிமை வழங்கும் போது எமது நாட்டு அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதா இல்லையா என எந்த ஆலோசனையும் பெறப்படவில்லை.

எமது நாட்டு மக்கள் மீண்டும் நாட்டுக்கு வருவது அரசியல் ரீதியாக நன்மை தரும் விடயமாக அமையும்.இந்த விடயம் தொடர்பில் தமிழ் பிரதிநிதிகள் சட்ட சபையில் வாத பிரதிபிவாதங்களை முன்வைத்து எதிர்ப்புகள் வந்தாலும் அந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு ஏற்ப அவர்கள் அவ்வாறான முடிவுகளை எடுத்துள்ளனர் என்றார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: