மைக்கேல் லெவிட் அவரது மனைவியுடன் படகிலேயே 5 மணி நேரம் தவித்துள்ளார்.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நோபல் பரிசு பெற்ற வெளிநாட்டவரை சுற்றுலா படகில் சிறைவைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புதனன்று நடந்த இச்சம்பவம் தொடர்பில் கேரள பொலிசார் நால்வரை கைது செய்துள்ளனர்.

தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் 72 வயதான மைக்கேல் லெவிட். வேதியியலில் கடந்த 2013 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்.

இவர் கேரள பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக அரசு விருந்தினராக கொச்சி நகருக்கு தனது மனைவியுடன் வந்துள்ளார்.

இந்த நிலையில், ஆலப்புழாவில் படகு சவாரி செல்வதற்காக மைக்கேல் லெவிட், அவரது மனைவி மற்றும் சிலர் சென்றுள்ளனர்.

அவர்கள் அனைவரும் படகில் உல்லாச பயணம் மேற்கொள்வதற்காக படகில் ஏறி அமர்ந்துள்ளனர்.

சம்பவத்தன்று கேரளாவில் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் இந்த படகு தளத்துக்கு வந்து படகை இயக்க கூடாது என்று கூறி தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் மைக்கேல் லெவிட் அவரது மனைவியுடன் படகிலேயே 5 மணி நேரம் தவித்துள்ளார். அதன் பிறகே அவர் படகு சவாரிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே தொழிற்சங்க போராட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு விலக்கு அளிக்கப்படும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்து இருந்தனர்.

ஆனால் அதை மீறி நோபல் பரிசு பெற்றவர் படகில் சிறை வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மைக்கேல் லெவிட், துப்பாக்கிமுனையில் ஒருமணி நேரம் தடுத்து நிறுத்தியது போன்ற அனுபவம் இது.

உண்மையில் இந்தாவில் இதுபோன்ற நிலை ஏற்படும் என கனவிலும் கருதவில்லை என கவலை தெரிவித்துள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: