அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகுவதாக மேகனும், ஹரியும் அறிவித்திருந்தனர்

அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகுவதாக மேகனும், ஹரியும் அறிவித்திருப்பது சோகமான செய்தி என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

ஹரி-மேகன் இருவரும் கடந்த புதன்கிழமையன்று அதிர்ச்சியான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டனர். அரச குடும்பத்தில் தங்கள் பங்கைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், பிரித்தானியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் தங்கள் நேரத்தை பிரித்து முன்னேறுவதாகவும், நிதி ரீதியாக சுயாதீனமாக இருப்பதற்கு வேலை செய்வதாகவும் அறிவித்தனர்.

இந்த அறிவிப்பினை சற்றும் எதிர்பார்த்திராத ராணி உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பெரும் கலக்கமடைந்துளளனர். இதுகுறித்து விரைவில் தீர்வு காண 4 அரச குடும்பங்களுக்கு ராணி அதிரடி உத்தரவினையும் பிறப்பித்துள்ளதாக செய்தி வெளியானது.

இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்பிடம், தற்போதைய அரச குடும்ப விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ஹரி மற்றும் மேகன் அரச குடும்பத்தை விட்டு வெளியேறுவது ‘வருத்தமாக’ இருப்பதாக கூறினார்.

மேலும், ‘எனக்கு ராணி மீது அதிக மரியாதை இருக்கிறது. இது அவருக்கு நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஒரு சிறந்த பெண்’ என்று கூறினார்.

மற்றபடி அரச குடும்ப விவகாரங்களில் ‘முழு விடயத்திலும் இறங்க விரும்பவில்லை’ என தெரிவித்தார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: