சுவரோவியங்களுக்கே விசமிகள் கழிவு ஒயில் அடித்து நாசம்

கொடிகாமத்தில் அண்மையில் வரையப்பட்ட சுவரோவியங்களுக்கு கழிவு ஓயில் அடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விசமத்தனமான செயற்பாடு நேற்று இரவுவேளை இடம்பெற்றதகவும் தெரிவிக்கப்டுகின்றது.

நாட்டைத் தூய்மைப்படுத்துவோம் என்ற செயற்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் இளைஞர் யுவதிகளால் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டான, தமிழர் பாரம்பரியங்கள் மற்றும் சமய பாரம்பரியங்கள் தொடர்பான சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

அவ்வாறாகவே யாழ் கொடிகாமம் பகுதியிலும் சுவரோவியங்கள் வரையப்பட்டிருந்தன. அந்த சுவரோவியங்களுக்கே நேற்று இரவு வேளை விசமிகள் கழிவு ஒயில் அடித்து நாசம் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: