விடுதியில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தற்கொலை

விடுதியில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் மூன்று பக்க கடிதத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த திருமலை என்பவரின் மகள் நிவேதா (23). இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. (தாவரவியல் ) 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள விடுதியில் இரண்டு மாணவிகளுடன் நிவேதா தங்கியிருந்துள்ளார். அவர்கள் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன் ஆய்வறிக்கை தயாரிப்பதற்கான கள ஆய்வுக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் தனியாக அறையில் இருந்த நிவேதா இன்று காலை விடுத்த பின்னரும் கூட, அறையைவிட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த பக்கத்து அறையை சேர்ந்த மாணவிகள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர்.

அப்போது நிவேதா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் உடனடியாக விடுதி காப்பாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் காப்பாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், நிவேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவருடைய அறையில் மேற்கொண்ட சோதனையில், மூன்று பக்க கடிதம் சிக்கியது. மேலும், புத்தகங்களில் காதல் குறியீடு மற்றும் கவிதைகள் எழுதி வைக்கப்பட்டிருந்ததால் காதல் தோல்வியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க சில நாட்களுக்கு முன்பு, மாணவி நிவேதா படிக்கும் துறையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர், மற்றொரு மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் அதே துறையை சேர்ந்த நிவேதா தற்கொலை செய்துகொண்டிருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: