எரிமலை வெடிப்பின் பின்னணியில் ஒரு ஜோடி திருமணம் செய்துகொள்ளும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்சில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறிய நிலையில், அதனால் உருவான எரிமலை சாம்பல் 60 மைல் தொலைவு வரை பரவியது.

பிலிப்பைன்சிலுள்ள Taal எரிமலை வெடித்துச் சிதறியதில் வெகு தூரத்திற்கு எரிமலை சாம்பல் பரவி மணிலா விமான நிலையத்தை அடைந்ததால் விமான நிலையம் மூடப்பட்டது.

இதுவரை யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், சுற்றுலாத்தலமாக விளங்கும் அத்தீவிலுள்ள சுமார் 6000 பேரை வெளியேற்றும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள்.

ஒரு பக்கம் எரிமலைச் சாம்பல் வெடித்துப்பரவ, மறுபக்கம் மின்னல்கள் தோன்றி, பார்ப்பதற்கே திகிலூட்டும் வகையில் அமைந்துள்ளதை புகைப்படங்களில் காணலாம்.

இன்னொரு முறை எரிமலை வெடித்தால் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஒரு பக்கம் எரிமலை வெடிக்க, எரிமலை வெடிப்பின் பின்னணியில் ஒரு ஜோடி திருமணம் செய்துகொள்ளும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: