இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மேஷம்

மேஷராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். உடல் நலனில் கவனம் தேவை.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணம் மேற்கொள்ள நேரிடும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

ரிஷபம்

ரிஷபராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு ஒன்றை துணிந்து எடுப்பீர்கள். அது சாதகமாகவே முடியும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாக முடியும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்

மிதுனராசி அன்பர்களே!

உற்சாகமாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைப்பதால் செலவுகளை சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. பிற்பகலுக்கு மேல் மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் பணிகளில் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சி உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.

கடகம்

கடகராசி அன்பர்களே!

தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் சாதகமாக முடிந்துவிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். அலுவல கத்தில் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருந்தாலும், பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

சிம்மம்

சிம்மராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் வருகையால் செலவுகளும் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண் டாகும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபா ரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் தேவையற்ற செலவுகளும் ஏற்படும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னி

கன்னிராசி அன்பர்களே!

பணப்புழக்கம் சரளமாக இருக்கும். செலவுகளும் தாராளமாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடுவதுடன் அதனால் ஆதாயமும் உண்டாகும். மாலையில் மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பாராத சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

துலாம்

துலாராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்களுக்குத் தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உறவி னர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமை காப்பது அவசியம். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும். பணியாளர்களால் சிறு பிரச்னை ஏற்பட்டு நீங்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

விருச்சிகம்

விருச்சிகராசி அன்பர்களே!

செலவுகள் அதிகரிக்கும் நாள். ஆனாலும், தந்தைவழியில் கிடைக்கும் பணவரவின் மூலம் செலவுகளைச் சமாளிப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது. வெளியூர்ப் பயணங் களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் வருகையால் பரபரப்பாகச் செயல்படவேண்டிய நிலை ஏற்படும்.வியாபாரத்தில் பணியாளர் களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

தனுசு

தனுசுராசி அன்பர்களே!

இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அவசியம் ஏற்பட்டால் குடும்பப் பெரியவரின் ஆலோசனை கேட்டு எடுப்பது நல்லது. புதிய முயற்சிகளை யும் பயணங்களையும் தவிர்க்கவும். உறவினர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். வெளியில் செல்லும்போது உணவு விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

மகரராசி அன்பர்களே!

உற்சாகமான நாளாக அமையும். திடீர் பொருள்வரவு மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவ லகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர் களால் ஆதாயம் உண்டாகும். விற்பனையும் விறுவிறுப்பாக இருக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.

கும்பம்

கும்பராசி அன்பர்களே!

இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என் றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும். உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். லாபமும் அதிகம் கிடைக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

மீனம்

மீனராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் மற்றவர் களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். பணிகளையும் மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரம் வழக்கம் போலவே காணப்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: