முட்டைகளை விழுங்கிய பாம்பு, பிடிபட்டவுடன் முட்டைகளை வெளியில் துப்பியது

அடைகாத்த கோழியை கொன்று விட்டு முட்டைகளை விழுங்கிய பாம்பு, பிடிபட்டவுடன் முட்டைகளை வெளியில் துப்பிய காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

கடலூர் அருகே உள்ள பூலோகநாதர் கோவில் என்ற இடத்தில் பைஜான் என்பவரது வீட்டில் வளர்த்து வந்த கோழி முட்டைகளை அடைகாத்து வந்த நிலையில், குஞ்சுகள் வெளிவர இன்னும் ஓரிரு நாட்களே இருந்துள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை கோழி கூட்டினுள் புகுந்த பாம்பு கோழியை கொன்றுவிட்டு அங்கிருந்த முட்டைகளை விழுங்கிவிட்டு, கூண்டுக்குள் இருந்ததை உரிமையாளர் அவதானித்துள்ளார்.

பின்னர் பாம்பு பிடிக்கும் ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் கொடுத்த பின்னர், லாவகமாக அந்தப் பாம்பினை பிடித்துள்ளார். பின்பு தான் விழுங்கிய மூன்று முட்டைகளையும் அடுத்தடுத்து கக்கியுள்ளது.

அதன்பிறகு அந்த பாம்பை எடுத்துச் சென்று காட்டில் விட்டு சென்றனர். பொதுவாக பாம்புகள் சாதாரணமாக கோழிகள் இடும் முட்டையை விழுங்குவது கிடையாது, கோழிகள் அடைகாக்கும் முட்டையை மட்டுமே பாம்புகள் விழுங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: