கடற்கரை பகுதிக்கு விளையாட சென்ற சிறுவர்களை காணவில்லை

வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கிழக்கில் இன்று மாலை விளையாடச் சென்ற மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர்.

இதையடுத்து கிராமத்து மக்களால் நாகர்கோவில் பகுதி முழுவதிலும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணியளவில் 3 சிறுவர்களும் ஒரே இடத்தில் காணப்பட்டனர் எனவும், அதன் பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிராம மக்களின் தேடுதல் வெற்றியளிக்காத நிலையில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு பொலிஸாரும் அங்கு சென்று சிறுவர்களைத் தேடி வருகின்றனர்.

கடற்கரைப் பகுதி, காட்டுப் பகுதி மற்றும் பாதுகாப்பு வலயப் பகுதி உள்ளடங்கலாக அனைத்துப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் தேடுதல் நடவடிக்கை இதுவரை வெற்றியளிக்கவில்லை.

சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவர்களின் பெற்றோர்களிடம் பொலிஸார் விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

நாகர்கோவில் கிழக்கைச் சேர்ந்த 10 வயதுடைய கலியுகமூர்த்தி மதுசன், புஸ்பகுமார் செல்வகுமார் ஆகியோருடன் 17 வயதுடைய சந்தியோகு தனுசன் என்ற சிறுவனும் காணாமல் போயுள்ளார்.

சந்தியோகு தனுசன் மன நலன் குன்றியவர் என்றும், அவர் 10 வயது சிறுவர்களுக்குரிய பண்பியல்புகளைக் கொண்டு காணப்படுகின்றார் எனவும் தெரிவித்துள்ள அந்தக் கிராமத்து மக்கள், இவர்கள் குறித்த தகவல் ஏதும் கிடைத்தால் 0776954359 என்ற இலக்கத்தின் ஊடாக வேலுப்பிள்ளை கோபாலபிள்ளை என்பவரைத் தொடர்புகொள்ளுமாறு உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: