தொலைக்காட்சி நடிகை தற்கொலை செய்து கொண்டு சக தோழிகள் தடுக்காத சம்பவம்

தற்போது திரையுலகில் பல பிரபலங்கள் தற்கொலை செய்துகொள்வது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதில் மும்பையை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை தற்கொலை செய்து கொண்டு சக தோழிகள் தடுக்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவையை சேர்ந்த சீஜல் ஷர்மா என்ற தொலைக்காட்சி நடிகை மும்பையில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். அவருடன் இரண்டு தோழிகள் தங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை சீஜல் ஷர்மா சொந்த விஷயம் காரணமாக திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்த நேரத்தில் அவருடைய தோழிகள் இருவரும் அதே அறையில்தான் இருந்ததாகவும், ஆனால் அவர்கள் ஏன் அந்த தற்கொலையை தடுக்க வில்லை என்றும் கேள்வி பொலிசாரின் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: