கூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு

அமெரிக்க கூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழப்பார் என 8 ஆண்டுகளுக்கு முன்னரே ஒருவர் கணித்த டுவிட்டர் பதிவு வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பின் முக்கிய வீரர் kobe bryant. கூடைப்பந்து விளையாட்டில் 20 ஆண்டுகளாக ஜாம்பவானாக திகழ்ந்தார்.

இந்நிலையில் 27ஆம் திகதி அதிகாலை Kobe தனது 13 வயது மகள் ஜியானா உட்பட 8 பேருடன் தனியார் ஹெலிகொப்டர் ஒன்றில் தவுசண்ட் ஆக்ஸ் என்னும் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

மலைப்பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.

இதில் Kobe அவரது 13 வயது மகள் ஜியானா உள்ளிட்ட 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்நிலையில் Kobe மரணம் குறித்து 8 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு நபர் பதிவிட்ட டுவிட்டர் பதிவு ஒன்று பதிவு நேற்று முதல் வைரலாகி வருகிறது.

டுவிட்டரில் நோஸோ என்ற பெயர் கொண்ட அந்த நபர் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில் ஒரு ஹெலிகொப்டர் விபத்தில் Kobe இறக்கப்போகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்று அந்த பதிவின் பின்னூட்டத்தில் அந்த நபர் மன்னிப்பும் கோரியுள்ளார். இந்த பதிவு நேற்று முதல் வைரலாகி வருகிறது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: