அமலாபால் விவாகரத்து செய்ய காரணமாக இருந்தவர் யார்?

நடிகை அமலாபால்- இயக்குனர் விஜய் விவாகரத்து செய்ய தனுஷ் தான் காரணம் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் விஜய்யின் தந்தையான ஏ.எல்.அழகப்பன்.

கிரீடம், மதராசப்பட்டிணம், சைவம், தெய்வத்திருமகள் என பல படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய்.

தலைவா படத்தை இயக்கிய போது அப்படத்தில் நடித்த அமலாபாலுடன் காதல் மலர்ந்தது.

இதனையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர், ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்தனர்.

தற்போது விஜய்க்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ள நிலையில், அவரது தந்தையான ஏ.எல் அழகப்பனின் பேச்சு வைரலாகி வருகிறது.

அவர் கூறுகையில், திருமணத்திற்கு பின்னர் அமலா பால் நடிப்பதில் விஜய்க்கு விருப்பமில்லை, ஆனால் அமலாபால் அதை பொருட்படுத்தாமல் தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்தார்.

தனுஷின் அம்மா கணக்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமான போது தான் பிரச்சனையே வெடித்தது என தெரிவித்தார்.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: