நிதி நிறுவன ஊழியர்களினால் குறித்த மோட்டார் சைக்கிள் கையகப்படுத்தப்பட்ட பொது கைகலப்பு

வவுனியாவில் இன்று மதியம் இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள நிதி நிறுவனத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளினை நிறுத்த முற்பட்டபோது வேறு ஒரு நிதி நிறுவன ஊழியர்களினால் மோட்டார் சைக்கிள் கையகப்படுத்தி செல்லப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா இரண்டாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட முசச்சக்கரவண்டிக்குரிய தவணைப்பணத்தை செலுத்துவதற்கு வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தங்க நகை அடகு வைத்து ஒரு இலட்சம் ரூபாயினை நிதி நிறுவனத்திற்கு செலுத்துவதற்கு நண்பர் ஒருவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிச் சென்றுள்ளார்.

குறித்த நபர் தான் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிளை குறித்த நிதி நிறுவனத்திற்கு முன்பாக நிறுத்த முற்பட்டபோது குறித்த மோட்டார் சைக்கிளிற்குரிய தவணைப்பணம் செலுத்தப்படவில்லை என்று தெரிவித்து வேறு ஒரு நிதி நிறுவன ஊழியர்களினால் குறித்த மோட்டார் சைக்கிள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து கையகப்படுத்த சென்ற ஊழியருக்கும் மோட்டார் சைக்கிளினை செலுத்தி வந்த நபருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்ததுடன் முச்சக்கரவண்டிக்கு தவணைப்பணம் செலுத்துவதற்காக ஒரு இலட்சம் ரூபாய் பணத்துடன் மோட்டார் சைக்கிள் கையகப்படுத்தி சென்றுள்ளதாக தெரிவித்து கைகலப்பில் ஈடுபட்டபோது இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் அழைத்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் அப்பகுதியில் சற்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: