உணவு விஷமடைந்ததன் காரணமாக, 41 மாணவர்கள் வைத்தியசாலையில்

உணவு விஷமடைந்ததன் காரணமாக, 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் கல்வி வலயத்தின் கினிகத்தேன- களுகல சிங்கள வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களாவர்.

இவர்கள் அனைவரும் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

காலை உணவை உட்கொண்ட பின்னர் மாணவர்களுக்கு மயக்கம், வாந்தி ஏற்பட்டதாகவும் இதனால் 11 மாணவிகள் உள்ளடங்கலாக 41 மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

பாடசாலையில் நடை​பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில், மாணவர்களுக்கு மாலு பணிஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை உட்கொண்ட மாணவர்களே பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: