வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது

வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விசா வழங்கும் நடவடிக்கையை நிறுத்துவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இலங்கையில் அதன் தாக்கம் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், கட்டுநாயக்க விமான நிலையதில் வைத்து உள் வருகை விசாவை பெற்று வந்தனர். எனினும் அந்த நடவடிக்கை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பானில் உள்ள இலங்கை தூதகரம் ஊடாக, இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு வைத்திய பரிசோதனை மேற்கொண்டதன் பின்னரே விசா வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
On Arrival எனப்படும் உள் வருகை விசா நடைமுறை நிறுத்தப்படுவதுடன், முன்கூட்டியே விசா பெற்றுக்கொண்ட பின்னரே இலங்கைக்குள் எந்தவொரு வெளிநாட்டவரும் வர முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
- Previous உணவு விஷமடைந்ததன் காரணமாக, 41 மாணவர்கள் வைத்தியசாலையில்
- Next மகன் காதலித்த பெண்ணை ஏமாற்றி தந்தை தாலி கட்டினார்
You may also like...
Sorry - Comments are closed