மகன் காதலித்த பெண்ணை ஏமாற்றி தந்தை தாலி கட்டினார்

இந்தியாவில் நாகை மாவட்டத்தில் மகன் காதலித்த பெண்ணை ஏமாற்றி, கடத்தி சென்று தாலிகட்டி, அடித்து துன்புறுத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பு நித்யானந்தம்(45). காய்கறி வியாபாரம் செய்து வரும் இவரது மகன் முகேஷ் கண்ணன்(20). இவர் ஐடிஐ படித்துள்ளார். தன்னுடன் படித்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இரண்டு பேரும் படிப்பினை முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் ஒன்றாக வேலைக்குச் சேர்ந்துள்ளனர். பின்பு விடுமுறை எடுத்து ஊருக்கு வந்த தருணத்தில், இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, பெண் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் முகேஷ் தான் குறித்த பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக கூறி பெண் வீட்டிற்கு நித்யானந்தம் சென்றுள்ளார்.
அங்கு பெண்ணிடம் தான் திருமணம் செய்து வைப்பதாக கூறியதையடுத்து, வருங்கால மாமனார் தானே என்று அவருடன் கிளம்பியுள்ளார். சிறுது தூரம் சென்ற பின்பு பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததோடு, தாலிகட்டி அடித்து துன்புறுத்தி அவரிக்காடு கிராமத்தை சேர்ந்த தம்பதி சக்திவேல் – பவுன்ராஜவள்ளியின் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளதோடு, இனி தன்னுடன் தான் வாழ வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டுள்ளார்.
பின்பு வீட்டிற்கு வந்து மகனிடம் குறித்த பெண் வேறொருவருடன் ஓடிவிட்டது என்று கூறியுள்ளார். அடைத்துவைக்கப்பட்ட இளம்பெண் அங்கிருந்து தப்பித்து மகளிர் நிலையத்தில் சென்று புகார் தெரிவித்த பின்பே நடந்த அனைத்தும் பொலிசாருக்கு தெரிந்துள்ளது.
பெண்ணின் புகாரை ஏற்ற பொலிசார் நித்யானந்தத்தையும், அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.
- Previous வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது
- Next இலங்கை பெண் லொஸ்லியா! முன்னணியில்
You may also like...
Sorry - Comments are closed