.கள்ள காதல் ஜோடியின் மூக்கை அறுத்த சம்பவம்

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியா மாவட்டம் கந்த் பிப்ரா கிராமத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவரும், அதே பகுதியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவரும் கள்ள தொடர்பில் இருந்துள்ளனர்.

குறிப்பிட்ட பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்துவரும் நிலையில், வீட்டில் அந்த பெண் தனியாக இருக்கும்போது வீட்டிற்கு சென்று உல்லாசமாக இறந்து வந்துள்ளார் அந்த இளைஞர்.

ஒரு நாள் அந்த இளைஞர் வீட்டிற்குள் போவதை பார்த்த அந்த பெண்ணின் மாமனார், கதவை பூட்டிவிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்து, மூக்கை அறுத்துள்ளனர். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணின் மாமனார் உட்பட 9 பேரை கைது செய்துள்ளனர். மூக்கு அறுபட்ட இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அந்த கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.கள்ள காதல் ஜோடியின் மூக்கை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: