கை குழந்தையோடு தன் காதலனை தேடி திரிந்த ரீபா

பங்களாதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண் ரீபா ராணி(25). இவர் இளமையிலேயே குடும்பத்தை இழந்து, வறுமையின் கொடிய பிடியில் சிக்கிய இந்த பெண் இந்தியா முழுவதும் சுற்றி திரிந்துள்ளார். ஒருகட்டத்தில் இளைஞர் ஒருவரை தனது பயணத்தின் போது சந்தித்த அந்த பெண், அந்த நபரை முழுமையாக நம்பியுள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்ணின் காதலன் அந்த பெண்ணை விட்டுவிட்டு சென்றுள்ளார்.

இதனால் கை குழந்தையோடு தன் காதலனை தேடி திரிந்த ரீபா, ஒருநாள் பேருந்து நிலையத்தில் உறங்கி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது கைகலப்பாக மாற ரீபாவின் குழந்தை இறந்துள்ளது. இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட ரீபா தொடர்ந்து தனது காதலனை தேடி வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சேலம் வந்த ரீபாவை போலீசார் மீட்டு கரூப்பூரில் உள்ள போதிமரம் ஆதரவற்ற பெண்கள் நல மையத்தில் சேர்த்துள்ளனர். இந்த செய்தி அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: