கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற பயத்தால் குறித்த கப்பல் நடுக்கடலியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

டயமண்ட் பிரின்சஸ் என்ற கப்பலில் இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற பயத்தால் குறித்த கப்பல் நடுக்கடலியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் 251 கனேடியர்கள் உள்ளடங்குவதாகவும், அவர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களைக் கரைக்கு கொண்டு சென்று தற்போது சிகிச்சை வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கப்பலிலுள்ள கனடிய பிரஜைகளின் நலன் மற்றும் சிகிச்சை குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பானிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஜப்பானியத் துறைமுகமான யோகோகாத மாவில் 3500 பயணிகளுடன் தரித்து நிற்கும் பயணிகள் கப்பலில் முன்னதாக 80 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

எனினும் தற்போதுள்ளவர்களில் குறைந்தது 10 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் குறித்த கப்பல் பேய் கப்பல் என மக்கள் கூறி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட நோயாளிகளில் அவுஸ்ரேலியா, ஜப்பான், ஹொங்கொங், அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: