பெண் சட்டத்தரணியும் அவரது கணவரும் செய்த செயல் யாவரையும் பிரமிக்க வைத்துள்ளது

தென்னிலங்கையிலுள்ள உணவகம் ஒன்றை பெண் சட்டத்தரணியும் அவரது கணவரும் சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கொஸ்மோதர பொலிஸாரிடம் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சட்டத்தரணி, மொரவக நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக வருகை தந்துள்ளார். இதன் போது அருகில் உள்ள உணவகத்திற்கு சட்டத்தரணியும் அவரது கணவரும் சென்றுள்ளனர்.

சட்டத்தரணியின் கணவர் காலை உணவிற்கு பன்றி இறைச்சி கோரியுள்ளார். அதற்கமைய வழங்கப்பட்ட பன்றி இறைச்சி போதாமையினால் மேலும் வழங்குமாறு சட்டத்தரணியின் கணவன் கோரியுள்ளார்.

அப்படி வழங்க வேண்டும் என்றால் மேலதிக கொடுப்பனவு வழங்க வேண்டும் என உணவக உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சட்டத்தரணியின் கணவர் அங்கிருந்த பொருட்களை அனைத்தையும் உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: