யாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் 2 மாணவர்களுக்கு இடையேயான மோதல் நிலை வன்முறையாக மாறியதால் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அவசர பொலிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. இது தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

கத்தி ஒன்றுடனும் வாள் ஒன்றுடனும் தொழில்நுட்பக் கல்லூரிக்குள் புகுந்துள்ளனர். அதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் மாணவர்கள் இடையே மோதல் இடம்பெறவில்லை.

வந்தவர்களில் ஒருவர் ஆசிரியர் ஒருவருக்கு தலைக்கவசத்தால் தாக்கியுள்ளார். அத்துடன், அங்கு மின்குமிழ் ஒன்று தாக்கிச் சேதமாக்கப்பட்டுள்ளது.

மாணவர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தன்னால் அழைத்துவரப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தொழில்நுட்பக் கல்லூரிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பில் வரும் திங்கட்கிழமை எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி சமூகம் அறிவித்துள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: