ஜெர்மனியிலும் கொரோனாவுக்கு 1000 பேருக்கு மேல் பலி

ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

ஜெர்மனி நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 6,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 145 பேர் பலியாகியுள்ளனர். இதனால், அந்நாட்டில் மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79,696 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 1,017 ஆக உள்ளது.

வியாழக்கிழமை 6,156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 140 பேர் உயிரிழந்திருந்தனர்.

கொரோனா வைரஸ்: அமெரிக்க ஆய்வு புதிய தகவல்!!

அதிகபட்சமாக பவாரியாவில் 20,237 பேரும் வெஸ்ட்பாலியாவில் 16,606 பேரும் வெர்ட்டம்பெர்க்கில் 16,059 பேரும் தலைநகர் பெர்லினில் 3,202 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிற ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியில் 1,15,242 பேருக்கும் ஸ்பெயினில் 1,12,065 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவில் மொத்தம் 5,03,006 பேரை கொரோனா பாதித்துள்ளது. இவர்களில் 33 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்துவிட்டனர்.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அளிக்கும் தகவல்படி, உலக அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டிவிட்டது. உயிரிழப்பும் 53 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: