ட்ரம்ப்க்கு கொரோனா சோதனை: 2வது முறையும் நெகட்டிவ்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்க்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என இரண்டாவது சோதனையிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வியாழக்கிழமை இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த இரண்டாவது சோதனையிலும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதியாகியுள்ளதாக வெள்ளை மாளிகை மருத்துவர் கான்லி கூறியிருக்கிறார்.

ட்ரம்ப்க்கு இந்த சோதனை 15 நிமிடங்களில் முடிந்தது. அவர் முழு ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மார்ச் மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்சி மற்றும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ ஆகியோர் பங்கேற்றனர்.

அமெரிக்காவில் ஒரேநாளில் 1,169 பேரைக் பலி கொண்ட கொரோனா

இந்த நிகழ்ச்சியில் பிரேசில் நாட்டு அதிபர் போல்சனரோவுடன் அந்நாட்டு தகவல் தொடர்பு செயலாளர் பபியோ வஜ்ஹர்டினும் கலந்துகொண்டார். இந்தச் சந்திப்பில் வஜ்ஹர்டின் ட்ரம்ப் மற்றும் போல்சனரோவுடன் கைகுலுக்கினார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: