கொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க, நாடுமுழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி நாட்டின் 49 விளையாட்டு நட்சத்திரங்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினார். இந்த கூட்டத்தில் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, விராட் கோலி, பிவி சிந்து, விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சச்சின் அட்வைஸ்
இதற்கிடையில் கொரோனா தொற்றுக்கு எதிராக வெற்றி பெற நம்பிக்கையுடன் இருப்பது அவசியம் என ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சச்சின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்ரீ நரேந்திர மோடி ஜி, கிரண் ரிஜுஜூ மற்றும் பல விளையாட்டு வீரர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. லாக் டவுன் குறித்த அவர்களின் தனிப்பட்ட பார்வை மற்றும் அனுபவம் குறித்து தெரிந்து கொள்ள முடிந்தது.

கவனம் தேவை

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய முடியவர்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் தற்போது அவர்களின் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நேரம். மேலும் நாம் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகும் நமது பாதுக்காப்பு அரணை உடைத்துவிடக் கூடாது. அந்த நேரத்தை நாம் எப்படி கையாளப்போகிறோம் என்பது மிகவும் முக்கியமானது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: