மக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் பொதுமக்களுடன் முரண்பாடாக நடந்து கொண்டு மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியிருப்பதாகத் தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்து அறிக்கையிடும்படி மாவட்ட சமூர்த்தி பணிப்பாளரை கோரியுள்ளதாகவும், விசாரணை முடிவில் குறித்த உத்தியோகத்தர் முறைகேடாக நடந்திருந்தால் அதற்குரிய தண்டனை வழங்குவதற்கும் பணித்துள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

விசாரணை இடம்பெறும் இந்த காலகட்டத்தில் தற்காலிகமாக குறித்த சமூர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யும் படியும் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளருக்கு அறிவித்துள்ளதாக அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்தி

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: