தனது கணவருடன் இருக்கும் ஸ்ரேயா வீதியில் நடனம்

தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, 2018-ஆம் ஆண்டு, ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரூ கோஸ்சீவ் என்பவரை, காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர் நடிகை ஸ்ரேயா.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக, உலகம் முழுவதுமே முடக்கத்தில் உள்ளது. இதன் காரணமாக, சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

ஆகையால் நடிகைகள் தங்கள் வீட்டிலிருந்தவாறே, பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதை இணையத்திலும் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், பார்சிலோனாவில், தனது கணவருடன் இருக்கும் ஸ்ரேயா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ஃபோட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மழைத் தூரலில் நடுரோட்டில் டான்ஸ் ஆடுகிறார். ஒருபுறம் ஸ்ரேயாவும், மறுபுறம் அவரது கணவரும் நடனம் ஆடுகிறார்கள்.

மொபைலில் ஒலித்த பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா, பின்னர் அவர் நடித்து மழை படத்தில் இடம்பெற்ற, ’நீ வரும்போது நான் மறைவேனா’ என்ற பாடலை தானே முணுமுணுத்துக் கொண்டு நடனமாடுகிறார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: