கட்டாய திருமணத்தால் மணமகனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

தமிழகத்தில் திருமணமான முதல் நாளிலேயே 17 வயது மனைவி குறித்த ரகசியத்தை கண்டுபிடித்த கணவன் அதிர்ச்சியில் உறைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த 17 வயது சிறுமி கல்லூரி முதலாமாண்டு படித்த நிலையில் அவருக்கு சுதீஷ் என்ற இளைஞனுடன் காதல் மலர்ந்தது.

இந்த சமயத்தில் கொரோனா லாக்டவுனால் கல்லூரி மூடப்பட்டதால் காதலனை நேரில் சந்திக்க முடியாத சிறுமி போனில் சுதீஷுடன் பேசி வந்தார்.

எப்போதுமே மகள் செல்போனில் இருப்பதை பார்த்த சிறுமியின் பெற்றோர் அவளின் காதல் விவகாரத்தை கண்டுபிடித்தனர்.

இதோடு 17 வயதான தங்கள் மகளுக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்து பேசி முடித்து அவசர அவசரமாக திருமணமும் செய்து வைத்தனர்.

மணமக்களுக்கு முதலிரவுக்கும் தயார் செய்தனர். ஏகப்பட்ட கனவுகளுடன் முதலிரவு அறைக்குள் நுழைந்தார் மாப்பிள்ளை. அங்கே மனைவி, காதலன் சுதீஷூடன் போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து அவர்களின் காதல் ரகசியத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தார், பின்னர் இது குறித்து மனைவியிடம் கேட்டார்.

இதையடுத்து சிறுமி நடந்ததை கூறி தனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த விடயத்தை தெரிவித்தார். இதற்கு மேல் செய்வதறியாமல் புதுமாப்பிள்ளை அங்கிருந்து கிளம்பினார்.

பின்னர் அவர் சென்ற உடனேயே சிறுமி, சுதீஷை வீட்டுக்கு வரும்படி சொல்லி உள்ளார். சுதீஷ் அங்கு வந்த போது சிறுமியின் தந்தை அவரை தடுத்து நிறுத்தியபோது உங்கள் மகள் தான் இங்கு வர சொன்னதாக சொன்னார்.

இதன் பிறகு சிறுமியின் தந்தை பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் சுதீஷை தாக்கி உள்ளனர். இதை பார்த்து பதறிய சிறுமி, காதலனை காப்பாற்றுவதற்காக தனக்கு 17 வயதே ஆவதால் கட்டாயப்படுத்தி வீட்டில் திருமணம் செய்துவிட்டதாக பொலிசில் சொன்னார்.

இதையடுத்து புதுமாப்பிள்ளை, சிறுமியின் குடும்பத்தார் என 6 பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: