அமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொடூரமான முறையில் கொலை

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பொலிசார், ஜோர்ஜ் ப்லோய்ட் என்ற கறுப்பின நபரை கீழே தள்ளி கழுத்தில் கால் வைத்து அழுத்தி கொன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்னால் மூச்சு விடமுடியவில்லை, தயவு செய்து விடுங்கள் என்று அந்த நபர் கதறக் கதற, பொலிஸாரால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

இந்த படுகொலைக்கு காரணமான நான்கு பொலிசார் பணிநீக்கம் செய்யப்பட்டதாக மினியாபொலிஸ் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

ஐந்து நிமிடங்கள் வெள்ளையின பொலிஸ் உத்தியோகத்தர் கறுப்பினத்தை சேர்ந்த நபரின் கழுத்தில் காலை வைத்து மிதித்ததை பார்த்தோம் என மினியாபொலிஸ் மேயர் ஜகொப் பிரை தெரிவித்துள்ளார்.

 

ஐந்து நிமிடங்கள் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் அடிப்படை மனித உணர்வை கூட இழந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புளொயிட்டின் மரணம் நிகழ்ந்திருக்க கூடாது என தெரிவித்துள்ள மேயர் புளொயிட்டின் குடும்பத்தவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

 

தாக்குதலின் போது அங்கிருந்த மக்களிடம் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டதும் தெரியவந்துள்ளது. பொலிசாரின் தாக்குதலைக் கண்டித்து அந்நகரில் மக்கள் போராடி வருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: