5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் முறையிடலாம்

கொரோனா தொற்று பரவியதை அடுத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் 3 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவு கணக்காய்வாளர் நாயகம் W.B.C. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

கொடுப்பனவு விடயத்தில் ஏதேனும் முறைப்பாடுகள் காணப்படுமாயின், www.auditorgeneral.gov.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து முறைப்பாடுகளை பதிவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் பிரதி கணக்காய்வாளர் நாயகத்தின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: