ஐ.டி.நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி.

new

1990 களில் புற்றீசல் போல புறப்பட்டு, படிப்படியாக வளர்ச்சியடைந்து பிரமிப்பூட்டும் வகையில் நிமிர்ந்து நின்ற ஐ.டி. துறை சமீப காலமாக சரிவைச் சந்தித்து வருகிறது. இந்தச் சரிவு பெரும் பின்னடைவாகி ஐ.டி. நிறுவனங்களை முழுமையாய் அழித்து விடுமோ எனும் அச்சம் மாணவர்களிடையேயும், ஐ.டி. ஊழியர்களிடையேயும் நிலவு கிறது. ஐ.டி. ஊழியர்களை கொத்து கொத்தாக வெளியேற்றும் செய்திகள் அடிக்கடி எதிரொலித்தப்படியே இருக்கின்றன.

அதற்கு காரணம் ‘ஆட்டோமேஷன்’ தொழில்நுட்பம் தான். பத்து பேர் தேவைப்பட்ட வேலைக்கு, ஆட்டோ மேஷன் நுட்பம் தெரிந்த ஒன்றோ… இரண்டோ… நபர்கள் போதும் என்பதே நிலைமை..! ‘கடினமாய் வேலை செய்யுங்கள்’ எனும் தாரக மந்திரத்திலிருந்து, ‘ஸ்மார்ட்டாக வேலை செய்யுங்கள்’ எனும் ஒரு புதிய மந்திரத்தினூடாக ஐ.டி. பயணிக்கிறது. இந்த சவாலான சூழலில் ஐ.டி. நிறுவனங்களில் பணி புரிகின்ற ஊழியர்களானாலும் சரி, புதிதாக ஐ.டி. வேலையைத் தேடி வரும் இளைஞர்களானாலும் சரி ஐந்து விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் ஐ.டி. நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது கடினமாகிவிடும். அவை…

1. நவீன நுட்பங்களில் பரிச்சயம் :

‘ஒன்றை செய், அதை நன்றே செய்’ எனும் கூற்று ஐ.டி. துறையில் கொஞ்சம் கொஞ்சமாய் விலகி வருகிறது. தெரிந்து வைத் திருக்கும் ஒரு விஷயம் சட்டென காலாவதியாகி விட, அதை மட்டுமே தெரிந்த நபர் செய்வதறியாது திகைக்க வேண்டிய சூழல் உருவாகிறது. ‘பன்முகத் தன்மை’ இன்றைய மிக முக்கியமான தேவை. நவீன தொழில் நுட்பங்களான டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன், இன்டர்நெட் ஆப் திங்க்ஸ், பிக் டேட்டா, ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், ரோபோட்டிக்ஸ், ஆகுமென்டர் ரியாலிடி, மொபிலிடி போன்றவற்றில் குறைந்த அளவு பரிச்சயமேனும் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது அவசியம். கூடவே நவீன தொழில் நுட்பங்கள் சிலவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

புதிதாக வேலை தேடுபவர்கள் இத்தகைய நுட்பங்களில் சான்றிதழ் பெறுவது அவசியம். ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் தங்களுடைய திறமையை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டியது மிக அவசியம்.

2. சூழலுக்கு ஏற்ப பணியாற்றும் தன்மை :

ஐ.டி. துறையின் சவாலான பயணத்தில், ‘ப்ளக்ஸிபிளிட்டி’ மிகவும் அவசியம். அதாவது ரொம்ப பிடிவாதமாக இருக்காமல், நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப தங்களுடைய விருப்பு வெறுப்புகளை மாற்றிக்கொள்ளும் குணாதிசயம் இருக்க வேண்டும்.

உதாரணமாக காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தான் வேலை செய்வேன். இந்த குறிப்பிட்ட வேலையை மட்டும் தான் செய்வேன். இந்த இடத்திலிருந்து மட்டும் தான் செய்வேன். என்னுடைய வேலையை மட்டும் தான் செய்வேன், அதை எனக்குப் பிடித்த வகையில் தான் செய்வேன்.. போன்ற பிடிவாதங்கள் உடையவர்கள் நிறுவனங்களில் நிலைக்க முடியாது. கொடுக்கப்படும் வேலை சிறிதோ, பெரிதோ அதில் மன ஈடுபாட்டோடு முழுமையாக கவனத்தை பதித்து வேலை செய்யும் ஊழியர்களையே நிறுவனங்கள் இப்போது எதிர்பார்க்கின்றன

You may also like...

0 thoughts on “ஐ.டி.நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ads
%d bloggers like this: