லண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு திருமணம்

நடிகர் சிம்பு லண்டனில் வசிக்கும் கோடீஸ்வர பெண்ணை திருமணம் செய்யப் போவதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தம்பி, தங்கைக்கு திருமணம் ஆன நிலையில், 37 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கிறார் சிம்பு.
தன் மகனுக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் என சிம்புவின் தந்தையும், பிரபல இயக்குனருமான டி.ராஜேந்தர் ஆசைப்பட்ட நிலையில் சரியான பெண் கிடைக்காமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் சிம்பு லண்டனை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அப்பெண் சிம்புவுக்கு தூரத்து உறவினர் என்பதும், அவர்கள் குடும்பத்துக்கு சொந்தமாக சில கல்லூரிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
சிம்புவின் நெருக்கமான உறவினர் ஒருவர் இத்தகவலை வெளியே கசியவிட்டாலும், சிம்புவின் தரப்பிலிருந்து இதை இன்னும் உறுதி செய்யவில்லை.
- Previous கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவில் வெடிகுண்டு வாய் வெடித்து துடிதுடித்த பசு
- Next இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?
You may also like...
Sorry - Comments are closed